புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழில் பதினைந்து வயது நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பருத்தித்துறைப் பகுதியில் உறவினருடன்  வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை 20 அவரது உறவுக்கார இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 18ஆம் திகதி பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி வசித்து வரும் வீட்டில் உள்ளவர்கள் இரவு வேளை வெளியில் சென்றிருந்த வேளை வீட்டிற்கு வந்த குறித்த இளைஞர் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டினை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதுடன்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top