புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியாவின், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள சூரிப்பாலி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் எனும் விவசாயி.


இவரது தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் வட மதுரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார்.

இன்று காலை 9 மணியளவில் பாண்டியன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இதன்போது அவரது 7 வயது மகள் முத்து லட்சுமி அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது தோட்டத்தில் போடப்பட்டிருந்த 500 அடி ஆழ ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருந்துள்ளது.

விளையாடிய முத்துலட்சுமி ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தாள். இதைகண்டு அதிர்ச்சியடைந்த பாண்டியன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார். ஆனால் அவர்களால் குழந்தையை மீட்க முடியவில்லை.

இதையடுத்து அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கும் பொலிசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்டு பணியில் ஈடுபட்டனர்.

சிறுமி 12 ஆழத்தில் சிக்கி உள்ளதும், சிறுமி பேசும் சத்தம் கேட்பது மேலே இருப்பவர்களுக்கு கேட்பதால் சிறுமியின் உயிருக்கு ஆபத்தில்லை என்பது மீட்பு குழுவினரால் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மீட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பொக்லின் எந்திரங்கள் மூலம் பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

மாவட்ட கூடுதல் எஸ்.பி. ஜியாவுல் ஹக் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் உள்ளிட்ட பொலிசார் அங்கு முகாமிட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top