புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அட இப்படியெல்லாமா பதில் சொல்வாங்க? நயன்தாராவின் செல்ல மூக்கு மீது ஒரு கள்ள கோபம் உட்கார்ந்திருக்கிறது இப்போது. பத்திரிகையாளர்களின் கேள்விக்கு ஒரு டைரக்டர் சொன்ன பதில்தான் நயன்தாராவின் இந்த கோபத்திற்கு காரணம்.


இதற்காக அவர் சம்பந்தப்பட்ட டைரக்டரை கோபித்துக் கொள்ளவில்லையாம். ஆனால் தனுஷுடன் இது குறித்து லேசு பாசாக விவாதித்ததாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

எதிர்நீச்சல் படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் அல்லவா? இது குறித்து அப்படத்தின் இயக்குனர் துரை.செந்தில் குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர் வெள்ளந்தியாக பேசிய சில வார்த்தைகள்தான் நயன்தாராவின் கோபத்திற்கு காரணமாம்.

''சத்தியமா நீ எனக்கு தேவையில்லை...பத்து நாளா சரக்கடிச்சு போதையில்லை...' என்று அந்த பாடல் தொடங்குகிறது. இந்த பாடல் காட்சியில் தனுசுடன், காதலில் தோல்வி அடைந்த ஒரு நடிகை ஜோடியாக ஆடினால் பொருத்தமாக இருக்கும் என்று கருதினோம். அதற்கு நயன்தாரா பொருத்தமானவராக இருந்தார். இதை தனுசிடம் சொன்னோம். கேட்டுப்பாருங்கள் என்றார். நயன்தாராவிடம் கேட்டபோது, அவரும் சம்மதித்தார்..

இவ்வாறு பதிலளித்திருந்தார் துரை.செநதில்குமார். இனி காதல் தோல்வி பாடல்கள் என்றால் நயன்தாராவை கூப்பிடுங்க என்று வழி காட்டிவிட்டார் செந்தில். எத்தனை பேர் இதே வழியில் நடந்து எரிச்சலூட்ட போகிறார்களோ?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top