புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழ் தமிழ் சினிமாவில் கனவுக் கன்னிகளாக வலம் வரும் நடிகைகள், திருமணத்திற்குப் பின்னர் காணமல் போய்விடுகின்றனர். ஒருசிலர் சினிமா உலகை விட்டு விலகிப்
போய்விடுகின்றனர்.ஹாலிவுட், பாலிவுட்டில் நடிகைகள் திருமணத்திற்குப் பின்னர் கதாநாயகிகளாக நடிப்பது சகஜம். ஆனால் தமிழ்திரை உலகில் நடிகைக்கள் திருமணத்திற்குப் பின்னர் நடிக்க யோசிக்கின்றனர்.சில நடிகைகள் சீரியலில் நுழைந்து சின்னத்திரையில் முக்கியமான இடத்தை பிடித்துவிடுகின்றனர். அதை பார்த்து மனதைத் தேற்றிக் கொள்வார்கள் அந்த கனவுக் கன்னிகளின் ரசிகர்கள்.சில நடிகைகள் திருமணத்திற்குப் பின்னர் குடும்ப வாழ்க்கையே போதும் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்வார்கள். திரை உலகை விட்டு விலகியவர்களைப் பற்றியும், சின்னத்திரைக்கு இடம் பெயர்ந்தவர்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

ஷாலினி இல்லையே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினி காதலுக்கு மரியாதை படத்தில் இளம் பெண்ணாக அறிமுகமானர். அமர்க்களம் படத்தில் அஜீத் உடன் நடித்த அவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். அப்புறம் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் ஷாலினி.















ஜோதிகாவின் விளம்பரம் மும்பையில் இருந்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இரண்டு குழந்தைகளுக்குப் பின்னர் இப்போது கணவர் சூர்யா உடன் விளம்பரப் படங்களில் தலைகாட்டுகிறார்.






கோபிகா எங்கே? மனசுக்குள்ளே காதல் வந்துச்சா என்று பாடிய கோபிகா திருமணத்திற்குப் பின்னர் வெளிநாட்டில் செட்டில் ஆனார். ஆனால் திரும்பவும் மலையாளப் படத்தில் நடிப்பதாக கேள்வி







தென்றல் ஜெயஸ்ரீ தென்றலே என்னைத் தொடு என்ற ஸ்ரீதர் படத்தில் அறிமுகமான ஜெயஸ்ரீ திருமணத்திற்குப் பின்னர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் ஒரே ஒரு கேம் ஷோவில் தலை காட்டியவர் பின்னர் இந்தப் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை.







முதல் மரியாதை ரஞ்சனி முதல்மரியாதையில் செவுலியாக வந்த ரஞ்சனி திருமணத்திற்குப் பின் சினிமாவிற்கு குட்பை சொல்லிவிட்டார்.







நிஷாந்தி எப்படி இருக்காங்க? ராமராஜனுடன் மட்டுமே அதிகமாக ஜோடி சேர்ந்த நிஷாந்தி இந்திப் பக்கம் போனார் அங்கே திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்.








கனவுக் கன்னி குஷ்பு குஷ்புவிற்கு கோவில் கட்டிய தமிழ் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த அளவிற்கு வெறித்தனமாக இருந்தனர். சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனபின்னரும் அக்கா, அண்ணி என நடித்தார். இப்போது சீரியலில் கதாநாயகியாகப் பார்த்து ஆறுதல் பட்டுக் கொள்கின்றனர்.






ஜாக்பாட் சிம்ரன் இடுப்பு டான்ஸ் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் சிம்ரன், திருமணத்திற்குப் பின்னர் நடிக்க மாட்டேன் என்று சொன்னார். பின்னர் சின்னத்திரைக்கு அழைத்து வந்தனர். சினிமாவில் அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களைத் தவிர வேறு எதுவும் கிட்டவில்லை. அதனால் ஜாக் பாட் நடத்தப் போய்விட்டார்.





லக் ரோஜா தெலுங்குப் பெண் ரோஜா செல்வமணியை திருமணம் செய்து கொண்டு ஒதுங்கினார். அவரை சீரியல் பக்கம் அழைத்து வந்தனர். ஆனால் அவரோ கேம்ஷோ பக்கம் செட் ஆகிவிட்டார்.







சீரியல் நாயகி தேவயானி சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கும் போதே இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு ஒதுங்கினார். பின்னர் சீரியல், விளம்பரம் என்று தலைகாட்டி இப்போது கணவருடன் கதாநாயகியாக நடிக்கிறார்.






ராதாவின் ராஜ்ஜியம் எண்பதுகளில் கனவுக்கன்னி ராதா. சகோதரிக்கு போட்டியாகவே நடித்தார். திருமணத்திற்குப் பின்னர் சினிமாவை விட்டு தூரமாகப் போய்விட்டார். இப்போது மகள்கள் நடிக்க வந்த பின்னர் மீடியாக்களில் அதிகம் வருகிறார்.






நதியா ஸ்டைல் இன்றைக்கும் இளமை மாறாமல் இருக்கிறார் நதியா. சினிமாவிட்டு வெகு தொலைவுக்குப் போயிருந்த நதியா குமரன் சன் ஆப்
மகாலட்சுமி மூலம் அம்மாவாக திரும்பி வந்தார்.







மீனா, சுகன்யா தொண்ணூறுகளில் ரசிகர்களின் கனவுகளில் வலம் வந்தவர்கள் மீனா, சுகன்யா. திருமணத்திற்குப் பின்னர் அக்கா, அண்ணியாக மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது சின்னத்திரையில் நடுவர்களாக சேவை செய்கின்றனர்.






அம்பிகா, பானுப்பிரியா இவர்களைத் தவிர அம்பிகா, பானுப்பிரியா ஆகியோரும் ஒருகாலத்தில் ரசிகர்களின் கனவுகளில் வலம் வந்தவர்கள்தான். திருமணத்திற்கு பின்னர் சீரியல் பக்கம் ஒதுங்கிவிட்டனர். சினிமாவில் அக்கா, அண்ணி வாய்ப்புதான் கிடைத்தது. அம்பிகா இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top