புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுன்னாகம் சந்தைப் பகுதயில் சிறுமியுடன் தகாத முறையில் நடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் சந்தை வியாபாரிகளிடம் வகையாக மாட்டிக்கொண்டு வாங்கிக்கட்டிய சம்பவம் இடம்
பெற்றுள்ளது.

சுன்னாகம் நவீன சந்தைப் பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளியான சுமார் 63 வயது மதிக்கத் தக்க முதியவரே இவ்வாறு அகப்பட்டவராகும்.

மாலை வேளையில் சுமார் 11 வயது மதிக்கத் தக்க சிறுமியுடன் தகாத முறையில் நடக்க முற்பட்டதை அவதானித்த வர்த்தகர்கள் முதியவரை கவனித்து விரட்டியுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபரை நவீன சந்தைப் பகுதியில் எத்தகைய நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாதென கூறி சபையினாலும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top