துப்பாக்கி மெகா ஹிட்டைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் தலைவா. இப்படத்தை மதராசப்பட்டினம் விஜய் இயக்கியுள்ளார்.
இதில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால், ராகினி நடித்துள்ளனர். முன்னதாக, இப்படத்துக்கு தலைவன் என்றுதான் பெயர் வைத்திருந்தனர்.
ஆனால் புதுமுக நடிகர் பாஸ்கரன் நடிக்கும் படத்துக்கு அதற்கு முன்பே அந்த தலைப்பை சூட்டி விட்டதால், ஏற்கனவே துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி பிரச்சினை போல் இன்னொரு பிரச்சினை வேண்டாமே என்று பின்வாங்கினார் விஜய்.
அதனால், தலைவனுக்குப் பதிலாக தலைவா என்று மாற்றினர்.
மேலும், தலைவா படப்பிடிப்பை மும்பையில் முகாமிட்டு நடத்தி வந்த இயக்குனர் விஜய், அதற்கடுத்து அவுஸ்திரேயா சென்று கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தி வந்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக