புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெண்ணொருவரை திருமணம் செய்வதாகக் கூறி 12 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவைச்
சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்வதாகக் கூறியே இவ்வாறு பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 22ம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, யாழ். பிறவுண் வீதியில் உள்ள நீராவியடி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் முறைபாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை இடம்பெற்று வருவதாகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜெப்ரி தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top