வங்கதேசத்தில் தலைநகர் டாக்கா அருகே உள்ள சவார் என்ற இடத்தில், ரானா பிளாசா என்ற 8 மாடிக் கட்டிடம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் இடிந்து விழுந்தது.
அந்தக் கட்டிடத்தில் தனியார் வங்கி, 300 கடைகள் மற்றும் ஐந்து ஆடைத் தயாரிப்பு பிரிவுகள் ஆகியவை இயங்கி வந்தன. இதனால் அந்த இடிபாடுகளில் பலர் சிக்கியதினால் இறந்தோரின் எண்ணிக்கை நேற்று வரை 304 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இது குறித்து மீட்புப்பணி அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை 2,348 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஆடை தயாரிப்புப் பிரிவில் வேலை செய்த வந்த இரண்டு கர்ப்பிணிப் பெண்களும் அந்த இடிபாடுகளில் சிக்கி கொண்டுள்ளனர்.
அந்த இடிபாட்டு அதிர்ச்சியில் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட நாங்கள், அவர்களையும் பிறந்த இரண்டு குழந்தைகளையும் உயிருடன் காப்பாற்றியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இவர்களில் இன்னும் பலர் இடிபாடுகளுக்கிடையே உயிருடன் சிக்கிக் கொண்டிருக்கலாம், அவ்வாறு சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்பதே தங்களது முக்கிய பணியாகும் என்று பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக