புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியாவில் 3 வயது சிறுமி ஒருவரை 14 வயது சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளான்.



ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார் பட்டியை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகளான 3 வயது சிறுமி ஒருவர், நேற்று மாலை தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அந்த சிறுமி திடீரென காணாமல் போனாள். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவளை அக்கம்பக்கத்தில் தேடினர்.

அப்போது அவர்களது பக்கத்து வீடான முருகன் என்பவரின் வீட்டில் உள்ளே இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டுக்குள் அதிரடியாக சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு முருகனின் மகனான முத்துராஜ் (வயது 14), சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவனிடமிருந்து சிறுமியை மீட்டனர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஊத்துமலை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி வழக்குப்பதிந்து முத்துராஜை கைது செய்து நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இன்று அடைத்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள முத்துராஜ் 7-ம் வகுப்பு மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top