தண்ணிக்குள்ளே இருந்து தும்மிய கதையாகிவிட்டது சமந்தாவின் நிலைமை. எந்த ஒரு நடிகை காதல் வயப்பட்டாலும், அதை எப்படியாவது ஸ்மெல் பண்ணிவிடும் வழக்கம் மீடியாவுக்கு இருக்கிறது. அதை
ஊதி பெரிதாக்கி ஜோடிகளை சேர்த்து வைப்பார்கள். அல்லது பிரித்தேவிடுவார்கள். இவ்விரண்டில் ஒன்று நடக்காத வரைக்கும் பேனாவை மூடுவதே இல்லை இவர்கள்.
இவர்களின் கழுகு கண்களில் கடைசியாக சிக்கிய ஜோடி சமந்தா சித்தார்த் ஜோடிதான். இந்த காதலை பல காலமாக வெளியே தெரியாமல் மூடி மூடி வைத்திருந்தார் சமந்தா.
சித்தார்த்தின் தெலுங்கு மார்க்கெட் பிரமாதமாக இருந்தாலும், காதல் விஷயத்தில் அவர் ஒரு அன் லக்கி ஆசாமி. இதனால் அவரது காதல் விஷயத்தில் பொறிக்கடலையை ருசித்துவிட்டு பொட்டலத்தை எறிந்து விடுவார்கள் சம்பந்தப்பட்ட நடிகைகளும். ஆனால் சமந்தா சித்தார்த் மீது வைத்திருக்கும் லவ் கொஞ்சம் ஸ்டிராங்காகவே இருக்கிறது.
ஆர்வத்தில் தன் தோழிகளிடம் சில விஷயங்களை அவர் பகிர்ந்து கொள்ள, அவர்கள் வேறு வேறு இடங்களில் இது பற்றி விவாதித்தார்களாம். எப்படியோ மீடியா வரைக்கும் வந்துவிட்டது இந்த காதல். தோழிகள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைத்த சமந்தா, தன் பழைய தோழிகள் அத்தனை பேரையும் அப்படியே கை கழுவி விட்டுவிட்டாராம். யாரிடமும் இனி ரகசியத்தை பேசக்கூடாது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறாராம்.
தனது மொபைல் நம்பரையும் அவர் மாற்றிவிட்ட காரணத்தால், தோழிகள் ஏரியா தொடர் அப்செட்.
0 கருத்து:
கருத்துரையிடுக