புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை நயன்தாராவின் காதல், அவரது வாழ்க்கை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டது.


அவர் என்ன தான் தேவையே இல்லை என்று ஒதுக்கி வைத்தாலும் சுற்றியிருப்பவர்கள் விடுவதாய் இல்லை. யாருடனாவது பேசினால் தானே பிரச்சினை என்று, பல படங்களில் நடித்து வந்தாலும் திரையுலகிடமிருந்து விலகியே இருந்து வருகிறார் நயன்தாரா.

இப்படி அமைதியாக இருந்து வந்த போது ஒரு பாடல் ரூபத்தில் வந்தது நயன்தாராவுக்கு பிரச்சினை.

நயன்தாரா எதிர்நீச்சல் படத்தில் ‘சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய எதிர்நீச்சல் படத்தின் இயக்குனர் துரை “சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல” என்ற பாடல் ஹீரோவின் காதல் தோல்வியின் போது வரும் பாடல். இந்த பாடலுக்கு நடமாடுபவர் உண்மையிலேயே காதலி தோல்வியடைந்தவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி நயன்தாராவை தேர்வு செய்து, அவரிடம் பேசுமாறு தனுஷிடம் கூறினோம்.

தனுஷும் பேசி சம்மதம் பெற்றுத் தர பாடல் சூப்பராக வந்திருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.

அவரது படத்தின் புரமோஷனுக்கு இது நல்ல செய்தியாக இருந்தாலும் ’இனி காதல் தோல்வி சப்ஜெக்ட் என்றால் நயன்தாரா தானா’ என்ற எண்ணத்தை திரையுலகில் ஏற்படுத்திவிட்டது.

இதையறிந்த நயன்தாரா தனுஷிடம் ’இதுக்குத்தான் என்னை ஆட சொன்னீங்களா?’ என சீறியதாக கோடம்பாக்கத்தில் கிளுக் என்ற சிரிப்புடன் அடிக்குரலில் பேசிக்கொள்கிறார்கள். இதையெல்லாம் இயக்குனர் மாதிரி தனுஷ் வெளியே சொல்வாரா?

தனுஷூடனான நட்பை மதித்து பணம் கூட வாங்காமல் தனது சொந்த காஸ்டியூமிலேயே நயன்தார நடித்துக் கொடுத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top