புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திருமணத்தின் போது ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாக இருக்கவேண்டும்  என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் மகாத்மா காந்தி தொடங்கி பல பிரபலங்கள் தங்களை விட வயது  மூத்த பெண்களையே திருமணம் செய்து
கொண்டிருக்கின்றனர்.


பாலிவுட், கோலிவுட், கிரிக்கெட் உலக பிரபலங்களும் கூட தன்னை விட வயது மூத்த பெண்களைத் திருமணம் செய்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் 61 வயதான ஜீனத் அமன் தன்னை விட அதிகம் வயது குறைந்த 36 வயதான இளைஞரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள பிரபலங்களில் மனைவிகளை விட வயது குறைந்தவர்கள் யார்? யார்? தெரிந்து கொள்ளுங்களேன்.



ஐஸ்வர்யா – அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சனுக்கு இப்போது 37 வயதாகிறது. இவர் தனது மனைவி ஐஸ்வர்யா ராயை விட இரண்டு வயது இளையவர்.




ஐஸ்வர்யா – தனுஷ்

சூப்பர் ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா தன்னை விட மூன்று வயது குறைவான தனுஷை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.



ஃபாராகான் – சிரிஷ்

பிரபல இயக்குநர் ஃபாராகான் தன்னைவிட 8 வயது குறைவான சிரீஷ் ஐ திருமணம் செய்து கொண்டிருக்கிறார்



ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை விட மூன்று மாதங்கள் மூத்தவராம். ஆனால் இருவருக்கும் இடையே பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியாது.



அஞ்சலி – சச்சின் டெண்டுல்கர்

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவியை விட 5 வயது இளையவராம்



ரோமி – கபில்தேவ்

கபில்தேவ் தன்னைவிட 4 வயது குறைவான ரோமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.



அனில் கும்ப்ளே -சேத்னா..

அனில் கும்ப்ளே தன்னைவிட வயது மூத்த சேத்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அதேபோல் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தன்னைவிட 4 வயது மூத்த ஜெயந்தியை திருமணம் செய்திருக்கிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top