அமெரிக்காவில் உள்ள ஓகியோ பகுதியில் லூக்காஸ்வில்லே என்ற பகுதி உள்ளது.
இந்த ஊரை சேர்ந்தவர் ஸ்டீவ்சுமித் (வயது 46). இவர் தனது தோழி ஒருவரின் 6 மாத குழந்தையை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்தார். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு நீதிமன்றில் நடந்து வந்தது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
விசாரணையின்போது ஸ்டீவ்சுமித் குடிபோதையில் இவ்வாறு செய்துவிட்டதாகவும், வேண்டுமென்றே நான் கொலை செய்யவில்லை என்றும், எனவே எனக்கு மரண தண்டனை விதிக்ககூடாது என்று வாதாடினார்.
ஆனால் அதை நீதிமன்று ஏற்கவில்லை. இதையடுத்து அவருக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஸ்டீவ் சுமதித்துக்கு 21 வயதில் மகள் இருக்கிறார். தந்தையை மரண தண்டனை அறைக்கு அழைத்து சென்றபோது அவரது மகள் கதறி அழுதார்.
0 கருத்து:
கருத்துரையிடுக