புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மொனராகலை - பிபில - கொலன்கெட்டிய பிரதேசத்தில் திருமணம் முடித்த பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலக தகவல்படி மேலும் தெரியவருவதாவது,

கொலன்கெட்டிய பகுதி வீடொன்றில் கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என ஒரு சிறிய குடும்பம் வசித்து வந்துள்ளது.

குறித்த வீட்டில் உள்ள கணவன் கூலி வேலை செய்துவருகிறார். மனைவி வீட்டில் உள்ளதுடன் இரு பிள்ளைகள் பாடசாலை செல்கின்றனர்.

கடந்த 29ம் திகதி கணவன் கூலி வேலைக்கு சென்றுள்ளார். பிள்ளைகள் வீட்டிற்கு அருகில் சிறிய தூரத்தில் விளையாட சென்றுள்ளனர்.

இதன்போது பெண் தனியாக வீட்டில் இருந்தபோது அங்கு வந்த நபரொருவர் பெண்ணின் வாயை பொத்தி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

´நான் சிறைக்குச் சென்றார் பரவாயில்லை´ என்று கூறி குறித்த நபர் இந்த பாலியல் குற்றத்தை புரிந்துள்ளார்.

இது தொடர்பில் பிபில பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சந்தேகநபர் நேற்று (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (02) பிபில நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top