புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐந்து வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளைக் கைவிட்டு மத்திய கிழக்கிற்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லவிருந்த நான்கு பேர்
தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் என ஏறாவூர் பற்றுப் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

இவர்களுக்கு உள்ளூரிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் தொழில் வாய்ப்புப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை கைவிட்டு விட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லவிருக்கின்றார்கள் என்கின்ற முறைப்பாடுகள் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் தடுக்கப்பட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

இவ்விதம் தம்மிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து அது பற்றித் தாம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அறிவித்ததன் பிரகாரம் அவர்கள் விமான நிலையத்தில் வைத்துத் தடுக்கப்பட்டு மீண்டும் கைக் குழந்தையுடன் இணைக்கப்பட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கு நிதியுதவியும் தொழில் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரதேச செயலாளர் கூறினார்.

சிறுவர்களைக் கை விட்டு வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு செல்வோர் பற்றிய விழிப்புணர்வு இப்போது பொதுமக்களிடையே அதிகரித்திருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top