ஆந்திர ஓட்டல் அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடந்த 26ம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக பவர் ஸ்டார் மீது ஏராளமானோர் புகார்கள் குவிந்தன. இதற்கிடையே, சீனிவாசனை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு 3 நாள் காவலில் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்தது.
இதையடுத்து, வேலூர் சிறையில் இருந்த சீனிவாசனை பொலிசார் நேற்று முன்தினம் சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 2வது நாளாக விசாரணை தொடர்ந்தது. மதியம் பார்சல் சாப்பாடும், இரவு இட்லியும் வழங்கப்பட்டது.
சாப்பிடும்போது, அந்த பவர் கட் ஆனாலும் இந்த பவர் எரிஞ்சிக்கிட்டேதான் இருக்கும் என்று பஞ்ச் டயலாக் பேசினாராம் சீனிவாசன். தொடர்ந்து இரவு இட்லி கொடுத்தபோது, அதை எடுத்து பார்த்த சீனிவாசன், இதுவும் நீங்க கொடுக்கிற தண்டனைகளில் ஒன்றா என்று கிண்டலாக சிரித்தாராம். சீனிவாசனை மீண்டும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக