புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சமந்தா தெலுங்கில் ஒரு கோடி சம்பளம் வாங்குவதாக தமிழகம் நம்பிக் கொண்டிருக்கிறது. ஒரு பிரபல வார இதழ் அப்படி எழுதவும் செய்தது. இந்நிலையில் நான் கோடியில் ஒருத்தியில்லை என
இனிய ஷாக் தந்திருக்கிறார் சமந்தா.

தெலுங்கில் மகேஷ்பாபுடன் நடித்த துக்குடு, சீதாம்மா... படங்கள் பம்பர்ஹிட். ஈகாவும் அப்படியே. இந்த தொடர் வெற்றிகள் காரணமாக தனது சம்பளத்தை ஒரு கோடியில் இருந்து 1.75 கோடிக்கு சமந்தா உயர்த்தியதாக ஆந்திராவில் புகைச்சல். இதை இப்படியேவிட்டால் இன்கம்டாக்ஸின் பருந்து மூக்கு வியர்த்துவிடும் என்பதால் சமந்தாவே நேரடியாக விளக்கம் தந்துள்ளார்.

நான் 1.75 கோடி வாங்குவதாக சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. உண்மையில் இவ்வளவு வேணும் என்று நான் கேட்பதுகூட இல்லை. இன்னும் நான் ஒரு கோடியைகூட தொடவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த விளக்கம் கோடம்பாக்கத்தில் எந்த ரியாக்ஷனையும் ஏற்படுத்தவில்லை. சமந்தா ஒயிட்ல வாங்கறதை மட்டும் சொல்லியிருக்காங்க. கருப்பையும் கணக்கில் எடுத்தா ஒரு கோடி தாண்டுமே என்கிறார்கள் கூலாக. உண்மையா மேடம்...?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top