படாவதி ஸ்டார் சீனிவாசன் இப்போதைக்கு வெளியே வருவார் என தோன்றவில்லை. கிரகநிலை அவ்வளவு மோசம்.
ஐம்பது லட்ச ரூபாய் மோசடியில் சிக்கி வேலூர் சிறையில் கோதுமை உருண்டை தின்று கொண்டிருக்கும் படாவதி ஸ்டார் மீது ஒரே நாளில் மூன்று பேர் மோசடிப் புகார் தந்துள்ளனர். இதில் அண்ணாநகரைச் சேர்ந்தவர் தந்திருப்பது 1.8 லட்சம் வாடகை பாக்கிக்கான புகார்.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவரிடம் ஒரு கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி பத்து லட்சம் கமிஷன் வாங்கியிருக்கிறார். இன்னொருவர் கேரளா கண்ணூரைச் சேர்ந்தவர். 5.35 கோடி கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி 21 லட்ச ரூபாய் கமிஷன் வாங்கியிருக்கிறார். இந்த இருவருக்கும் கடனும் வாங்கித் தரவில்லை, கமிஷன் காசையும் திருப்பித் தரவில்லை.
பாபா டிரேடிங் கம்பெனி என்ற பெயரில்தான் இந்த மோசடிகளை படாவதி ஸ்டார் செய்திருக்கிறார். அவர் மீது இன்னும் பல மோசடிப் புகார்கள் தரப்பட வாய்ப்புள்ளது. அந்தளவு மாநிலங்கள் தாண்டியும் கைவரிசை காட்டியிருக்கிறார். தொடர் வழக்குகள் காரணமாக காமெடி நடிகர் மெல்ல வில்லனாக உருவெடுத்திருக்கிறார். இவரை எப்படி படத்தில் போடுவது என இயக்குனர்கள் தயக்கம் காட்டுவதால் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படத்திலிருந்தும் படாவதி ஸ்டாரை கழற்றிவிடுகிறார்கள்.
பாபா டிரேடிங் கம்பெனி மோசடியால் படாவதி ஸ்டாரின் நிலைமை இப்போது,
கதம்... கதம்..
0 கருத்து:
கருத்துரையிடுக