கொலிவுட்டில் தற்போது 7 படங்களில் நடித்துவரும் ஹன்சிகா, சிம்புவுடன் மட்டும் வேட்டை மன்னன், வாலு என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சிம்பு படங்களுக்கு போக மீதமுள்ள திகதி
மட்டுமே அவர் மற்றவர்களுக்கு கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர் சிம்புவின் ஆள் என்றும் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசு எழுந்துள்ளது.
ஆனால் இந்த செய்தி எப்படியோ ஹன்சிகாவின் காதுக்கு சென்றதால் மிகவும் அதிர்ச்சியில் உரைந்துள்ளார்.
சிம்புவுடன் இரண்டு படங்களில் நடிக்கிறேன் என்பதற்காக என்னையும், அவரையும் இணைத்து பேசுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
நானும், அவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. எல்லா நடிகர்களையும் போல் தான் அவருடனும் பழகி வருகிறேன்.
அதோடு, அவர் படத்துக்குப் போக இருக்கும் திகதியைத் தான் மற்ற படங்களுக்கு கொடுக்கிறேன் என்று சொல்வதும் சுத்தப்பொய்.
எனது திகதிக்காக பல மாதங்களாக அவரும் காத்திருந்திருக்கிறார் என்று படபடக்கிறார் ஹன்சிகா.
அதோடு, எனக்கும் சிம்புவுக்குமிடையே காதல் என்று பரவிய செய்திகளை எனது அபிமானிகள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஹன்சிகா.
0 கருத்து:
கருத்துரையிடுக