புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-சென்னையில் பங்களாவை வாடகைக்கு எடுத்து விபசார தொழில் செய்த புரோக்கர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அந்த வீட்டின் ரகசிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த
இளம்பெண் காவல்துறையினர் மீட்கப்பட்டார்.

நெசப்பாக்கத்தில், பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் பெண்களை வைத்து ஒரு கும்பல் விபசார தொழில் செய்வதாக காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த விபசார கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

கூடுதல் ஆணையர் நல்லசிவம், துணை ஆணையர் சிவகுமார், உதவி ஆணையர் கிங்ஸ்லின் ஆகியோர் மேற்பார்வையில் விபசாரதடுப்பு காவல்துறை ஆய்வாளர் மதி தலைமையிலான தனிப்படை காவலர்கள் குறிப்பிட்ட அந்த விபசார பங்களா வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு ரகசிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காவல்துறையினர் மீட்டனர். அந்த பெண்ணை விபசாரத்தில் தள்ளிய புரோக்கர்கள் உதயகுமார், கனகராஜ், ஜோதிமணி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top