நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மே தினக் கூட்டத்திற்குச் சென்ற தொழிலாளி ஒருவர் பஸ் மிதி பலகையிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்றுகாலை 10 மணிக்கு லிந்துலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
டயகமவில் இருந்து நுவரெலியாவிற்கு டெஸ்போர்ட் வழியாக சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் இருந்து குறித்த நபர் விழுந்து படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.சாந்தை இணையம்
டயகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கருப்பையா காமராஜ் என்பரே விபத்தில் உயிரிழந்தவராவார்.
சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து பஸ்ஸின் சாரதி கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சாந்தை இணையம்
0 கருத்து:
கருத்துரையிடுக