யாழில் முதல் மனைவி இருக்க இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்த நபர் ஒருவரை இன்று வியாழக்கிழமை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்.திருநல்வேலியைச் சேர்ந்த குறித்த நபர் முதலில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவரிடம் விவாகரத்து பெறாமல் இன்னொரு பெண்ணைத் திருமணம் முடித்து மூன்று நாளில் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.பொலிஸார் குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது,
பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் முடித்ததாகவும் முதலில் காதலர்களாக இருந்த பின்னர் திருமணம் முடித்ததாகவும், திருமணத்திற்காக 10 லட்சம் ரூபா சீதனமாக தான் பெற்றதாக குறித்த நபர் விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்
0 கருத்து:
கருத்துரையிடுக