புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இசைக்கு இசைவாக்கம் செய்யும் கலையை கலிபோர்னியா விஞ்ஞானிகள் வெற்றிகரமாக கடல் சிங்கம் ஒன்றுக்கு கற்பித்துகொடுத்துள்ளனர்.



மனிதர்கள் மற்றும் பறவைகளை தவிர விலங்குள் இசைக்கு தமது பிரதிபலிப்பை காண்பிப்பது இதுவே முதல் தடவை என கலிபோர்னியா பல்கலைக்கழத்தை சேர்ந்த பீடர் குக் தெரிவித்துள்ளார்.சாந்தை இணையம்

இவர் 'ரொனான்' என்று அழைக்கப்படும் கடல் பெண் சிங்கம் ஒன்றுக்கு இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் கலையை கற்பித்துகொடுத்துள்ளார்.
இசையை கேட்டவுடன் நீர்த்தடாகம் ஒன்றிலிருந்த இந்த கடல் சிங்கம் தரைக்கு வந்து தனது தலையை அசைக்கும்  வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளன. இக்காட்சிகள் பலரை வெகுவாக கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

'ரொனான் வெற்றிகரமாக இசைக்கு தனது அசைவை காட்டும்' என அதனது பயிற்றுவிப்பாளரான குக் தெரிவித்துள்ளார்.

முதலில் ரொனானுக்கு பாடலுக்கு ஏற்றவாறு தலை அசைப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பின்பு அது அதனை பறிமாற்றம் செய்துகொண்டது. இதற்கு முன்பு ரொனான் இசை என்ற ஒன்றை கேட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரொனான் கடந்த 2008 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. நெடுஞ்சாலை ஒன்றில் கிடந்த நிலையில் அது கலிபோர்னியா பல்கலைக்கழத்தில்
விடப்பட்டது.

எனது முதல் அறிமுகத்திலே ரொனான் பிரகாசமான கடல் சிங்கம் என்பதை நான் அறிந்துகொண்டேன்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top