இங்கிலாந்து நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், 220 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ரெயில்பாதை ஒன்றை சமீபத்தில் கண்டறிந்துள்ளார்கள்.
இங்கிலாந்தின் டெர்பிஷயரில் வசித்து வருபவர் ஜான் மிட்கிளே (வயது 55). இவரது வீட்டின் பின்புறம், ஒரு பாதை கருங்கற்களால், கிட்டத்தட்ட மறைக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்டறிவதற்காக, வீட்டின் உரிமையாளரிடம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அனுமதி பெற்றனர்.
பின்னர், கடந்த ஜனவரி மாதம் அவரது வீட்டின் பின்புறத்தில், 3 மீட்டர் ஆழத்திற்கு தோண்டியபின், 18 மீட்டர் நீளமுள்ள பழமையான ரெயில் பாதையைக் கண்டனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்த பிரிட்ச்சிலி டன்னல் என்று அழைக்கப்பட்ட அந்தப் பாதை, 1793ல் போடப்பட்டது ஆகும்.
பிரபல பொறியியல் நிறுவனமாக விளங்கிய பட்டர்லி நிறுவனம், 1793ஆம் ஆண்டு குதிரைகளால் இயக்கப்பட்ட ரெயில்பாதை கொண்ட பட்டர்லி காங்ரோடு என்ற இடத்திற்கு, இந்த குகை ரெயில்பாதை மூலம், தங்களுடைய இரும்புத் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய சுண்ணாம்புக் கற்களைக் கொண்டுவர பயன்படுத்தியுள்ளார்கள்.
1977ல் இந்த இடத்தை விலைக்கு வாங்கியவர், பாறைகள் வைத்துக்கட்ட விரும்பியபோது, ரெயில்வேத்துறை மறுத்துள்ளது. இதனால், அப்போதைய விலைமதிப்பின்படி 400 பவுண்ட் செலுத்தி, தன்னுடைய இடத்தில் சென்ற ரெயில்பாதையை விலைக்கு வாங்கி, பின்னர் அதன்மீது சுவர் எழுப்பியுள்ளார். குகையின் ஆரம்பம், இவரது வீட்டின் பின்புறம் வந்ததால் அதுவும் மறைந்துபோக நேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக