புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒரே சர்வதேச பாடசாலையில் பயில்கின்ற 15 வயது சக மாணவிக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பின் கற்பழித்து இருக்கின்றார் 16 வயது மாணவன்.


அதற்கு பின் இம்மாணவியை ஆப்கானிஸ்தானிய பிரஜை ஒருவருக்கு இவர் விற்க ஆப்கானிஸ்தானிய பிரஜையும் பலாத்கார செக்ஸ் வைத்து இருக்கின்றார்.

இரு கிரிமினல்களும் தெகிவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போடப்பட்டு உள்ளார்கள்.

சக மாணவியை தெகிவளையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருக்கின்றார் மாணவன். மாணவி மயங்கிப் போய் விட்டார். உணவகத்தோடு அண்டிய பீச்சுக்கு மாணவியை கொண்டு சென்று கற்பழித்து இருக்கின்றார்.

பின் கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்கு மாணவியை கொண்டு சென்று இருக்கின்றார். ஆப்கானிஸ்தானியர் ஒருவருக்கு 2000 ரூபாய்க்கு விற்று இருக்கின்றார். ஆப்கானிஸ்தானியரும் மாணவியை பலாத்கார செக்ஸிற்கு உட்படுத்தி இருக்கின்றார்.

ஆப்கானிஸ்தானியரின் பெயர் முஹமட் அக்பர். நாவலவில் உள்ள ஹோட்டல் ஒன்று தங்கி இருந்தவர்.

மாணவி வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் களுபோவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இருக்கின்றார் என்று தெரிகின்றது.

இக்கைது நடவடிக்கையில் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸாரின் பங்களிப்பும் காத்திரம் ஆனது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top