பிரிட்டனில் சின்னஞ்சிறிய பள்ளி குழந்தைகள் கூட 'டேப்லட்' எனப்படும் நவீன கம்ப்யூட்டர்&செல்போன்களின் பிரியர்களாக இருக்கின்றனர். குறிப்பாக, 'ஐபாடு' அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது. நிறைய
குழந்தைகள், பெற்றோரிடம் அடம்பிடித்து இதை வாங்கி உள்ளனர். ஸ்மார்ட் போன்களுக்கும் குழந்தைகள் அடிமையாக உள்ளனர்.
இந்த விவகாரம் அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. ஆனால், சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு குழந்தைகளுக்கு டேப்லட் வெறி பிடித்துள்ளதாம். இதனால் அவர்களை இயல்பு நிலைக்கு திரும்பச் செய்ய மனநல சிகிச்சை நிபுணர்களிடம் பெற்றோர் அனுப்பிவைத்து வருகிறார்கள். 4 வயதுடைய ஒரு பெண் குழந்தை கூட சிகிச்சைக்கு சென்று வருகிறது. சாந்தை இணையம்
அவளின் பெற்றோர், அவளிடம் இருந்து 'ஐபாடு'ஐ பறித்ததால், மனஅழுத்தம் ஏற்பட்ட நிலையில், அவளுக்கு இந்த சிகிச்சை தேவைப்படுகிறது. 28 நாட்கள் கொண்ட இந்த சிகிச்சைக்கு பெற்றோர் ரூ.1.25 லட்சம் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக