புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குளியாபிட்டி - பிங்கிரிய - கும்பல்வெல பகுதியில் லொறியும் முச்சக்கரவண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தில் பிறந்து 26 நாட்களேயான கைக்குழந்தையொன்று பரிதாபமாக
பலியாகியுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கம்பளை - நுவரெலியா வீதியின் நோனவத்தை பகுதியில் முச்சக்கரவண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதோடு மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் மொரகஹேன - மில்லேவ பகுதியில் லொறியொன்று பாதசாரதி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top