புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவரின் மனைவிக்கு 12ம் திகதியான நேற்று பிற்பகல் 12.12 மணிக்கு குழந்தை பிறந்தது.
12-12-12 தினத்தை உலகமே விசேடமான நாளாக கருதியமையால் மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


இதற்கிடையே மருத்துவமனைகளிலும் நேற்று சிசேரியன் பிரசவங்கள் களை கட்டியிருந்தன.

இந்த நிலையில் ஆந்திர மருத்துவமனை ஒன்றில் 12ம் திகதியான நேற்று ஒரு பெண்ணுக்கு சரியாக பிற்பகல் 12.12 மணிக்கு குழந்தை பிறந்து அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

அனந்தப்பூரை சேர்ந்த ராஜசேகர், திருப்பதியில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

நிறை மாத கர்ப்பிணியாக இருந்து வந்த மனைவி காயத்ரிக்கு கடந்த 9ம் திகதி பிரசவ வலி ஏற்பட்டது.

இதனால், அவரை திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு நேற்று மதியம் 12.12 மணிக்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இது குறித்து ராஜசேகர் கூறுகையில், என் மனைவி காயத்ரிக்கு இந்த மாதம் 20ம் திகதிதான் குழந்தை பிறக்கும் என டொக்டர்கள் கூறியிருந்தனர்.

ஆனால், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அரிய, அபூர்வ நாளான 12-12-12 அன்று பிற்பகல் 12.12 மணிக்கு குழந்தை பிறந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top