புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மயன் கணிப்பில் இந்த மாதத்துடன் உலகம் அழிகிறது என உலகெங்கும் பேச்சாக உள்ள நிலையில்
“இதோ இதற்குள் இருந்தால், தப்பித்துக் கொள்ளலாம்” என ஒரு ராட்சத பந்துடன் வந்திருக்கிறார்,
சீனாக்காரர் ஒருவர்.


“உலகில் ஏற்படக்கூடிய எந்த அழிவில் இருந்தும் உங்களை பாதுகாக்கக்கூடியது இது” என இவர்
காட்டும் பந்து, ஸ்டீல் பிரேமினால் ஆனது. வெளிப்பரப்பில் உள்ளது, ஃபைபர் கிளாஸ். இதுபோன்ற
8 ராட்சத பந்துகளை தயாரித்து வைத்திருக்கிறார், சீனாவைச் சேர்ந்த விவசாயியான லியூ குய்யுவன்.

கீழேயுள்ள போட்டோவில் உள்ளதுதான், அவர் குறிப்பிடும் ராட்சத பந்து. பார்த்துவிட்டு, மேலதிக
விபரங்களுக்கு அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் சீனப் பெரும் சுவரை, ‘The Great wall of China’ என்று
அழைப்பார்க். அந்த வகையில் இதை, ‘The Great ball of China’ என்கிறார்கள் சிலர்.

“இயற்கை அழிவுகள் ஏற்படும் நேரத்தில், இதற்குள் ஏறி இருந்துவிட்டால், புயல், பூகம்பம், ஏன்சுனாமிகூட எதுவும் செய்யாது. பந்து உருளுமே தவிர, உள்ளே இருப்பவர்களின் உயிருக்கு
உத்தரவாதம் உண்டு” என்கிறார் லியூ குய்யுவன். அப்படி என்னதான் பாதுகாப்பு அம்சங்கள்இதில் உள்ளன? வாருங்கள் பார்க்கலாம்
சீனாவின் ஹீபி மாகாணத்தின் குவான்டன் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த விவசாயி. தனது
வீட்டின் பின்புறம் முதலாவது ராட்சத பந்தை தயாரித்தவர், சீன அரசு அதிகாரிகளை அழைத்துக்
காண்பித்தார்.

அவர்கள் சில சோதனைகளை செய்துவிட்டு, இதன் வெளிப்புற ஷெல், காலநிலை அழிவுகளில் இருந்து
தடுக்கும் வகையில் உறுதியாக உள்ளது என்று கூறியதில் குஷியாகி, மேலும் 7 பந்துகளை தயாரித்து
முடித்துவிட்டார். சீன அரசு இதன் சிறப்புகளை வெளிப்படையாக அறிவித்தால், உலக அளவில் தயாரிப்பு
உரிமையை விற்பனை செய்ய முடியும் என்பது இவரது கனவு.
சூறாவளி அடித்து நாட்டுக்குள் கடல் புகுந்தாலோ, அல்லது, சுனாமி வந்து கடலுக்குள் இழுத்துச் சென்றாலோ
, இந்த பந்து தண்ணீரில் மிதக்கக்கூடியது. பூகம்பம் ஏற்பட்டு, பூமி குலுங்கினால், மற்றைய வீடுகள்
பொலபொலவென உதிர்ந்து விழக்கூடியவை. ஆனால், இது தரையோடு பிணைக்கப்படாமல் பந்து
ஷேப்பில் உள்ளதால் உருளக்கூடியது.

உள்ளே இருப்பவர்களுக்காக, ஆக்சிஜன் சப்ளை உண்டு. அத்துடன் உருளும்போது அடிபடாமல்
தப்பித்துக் கொள்ள சீட் பெல்ட்டுகளும் உள்ளன.
ஒரு ராட்சத பந்துக்குள் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 14 பேர் வசதியாக அமர்ந்து கொள்ள முடியும்
. அத்துடன், தண்ணீரில் மிதக்கும்போது, upright பொசிஷனில் மிதக்கும். வெளி ஷெல் ஏர்-டைட்டாக
செய்யப்பட்டுள்ளதால், தண்ணீர் உள்ளே செல்லாது.

அளவில் பெரிய இந்த ராட்சத பந்தை உருட்டிச் செல்ல குறைந்தபட்சம் 4 பேராவது தேவை. இதனால்,
சாதாரண காற்றுக்கு இது அசைந்து கொடுக்காமல், நின்ற இடத்திலேயே நிற்கும்.
இந்த ராட்சத பந்து பற்றி தெரிந்து கொண்ட சீன கோடீஸ்வரர் ஸான் ஸொங்ஃபு, 3 பேர் அடங்கிய தமது
குடும்பத்துக்காக ஒரு பந்தை புக் செய்துவிட்டார். ஆரஞ்சு வர்ணத்திலான அந்த பந்துக்குள், அவரது
குடும்பத்தை சேர்ந்த 3 பேர், 10 மாதங்கள் தங்கியிருக்க, வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்கிறார் லியூ
குய்யுவன். கோடீஸ்வரர் ஸான் ஸொங்ஃபு, சுமார் 2 லட்சம் டாலர் செலவில் அந்த பந்தை பெற்றுக்
கொள்கிறார்.

அட, நல்ல வேளையாக லியூ குய்யுவன், தமிழகத்தில் இல்லை. இருந்திருந்தால், கலைஞர் குடும்பம்
, இவரிடம் புக்கிங் செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ரொம்ப பெரிய அந்த ஒரு குடும்பத்துக்கு
மட்டுமே இவரிடம் உள்ள அனைத்து பந்துகளும் தேவைப்பட்டிருக்கும்!

அதன் பின் எக்ட்ரா பந்து, ஸான் ஸொங்ஃபுக்கும் இல்லை, சுந்தர் குஷ்புக்கும் இல்லை!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top