புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் ஈவ் டீசிங் தொந்தரவு காரணமாக பாலத்தில் இருந்து குதித்து சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலுபாஷா என்ற பகுதியில் வசித்து வரும் 15 வயதான அந்த சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபன் தொடந்து கேலி, கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது.

நாளுக்கு நாள் அவனது தொந்தரவு அதிகரிக்கவே பொறுக்கமுடியாத சிறுமி செவ்வாயன்று மாலை வீட்டின் அருகே ஸ்வர்ணரேகா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தில் ஏறி குதித்து விட்டாள். ஆனாலும் அவளுடைய முயற்சி பலிக்கவில்லை. அருகில் இருந்தவர்கள் சிறுமியை காப்பாற்றி எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் தற்கொலை முயற்சி குறித்து கருத்து கூறியுள்ள மாவட்ட எஸ்.பி அகிலேஷ் குமார் ஜா, ஈவ் டீசிங் செய்த வாலிபன் சிறுமியை தொடர்ந்து துன்புறுத்தி வந்திருப்பது தெரியவந்ததாக கூறினார். பள்ளிக்குச் செல்லும் போதும், டியூசன் படிக்கச் செல்லும் போதும் அவன் சிறுமியை கேலி செய்வதாக பெற்றோர்கள் வாய்வழி புகார் மற்றும் கூறியுள்ளனர்.

இதனால் பள்ளிக்கு அனுப்பாமல் தனியாக படிக்க அனுப்பி வைத்தனர். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு சிறுமியை கடத்தி கொண்டு போய் லாட்ஜில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளான். பின்னர் பெற்றோரின் மிரட்டலை அடுத்து திரும்ப கொண்டுவந்து ஒப்படைத்துவிட்டான்.

மறுபடியும் அவனுடைய ஈவ் டீசிங் தொடரவே பொறுக்க முடியாமல் தற்கொலை செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளாள் அந்த சிறுமி. இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் எஸ்.பி தெரிவித்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top