புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சங்கராபுரம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த தம்பி மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த, விவசாயி கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி செல்வி, (வயது25). இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. மூன்று குழந்தைகள் உள்ளனர். பிரகாஷ், கடந்த 20 நாட்களுக்கு முன் கைகளத்தூர் கிராமத்திற்கு கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்றிருந்தார். நேற்று மாலை, 3½ மணியளவில், பிரகாஷ் மனைவி செல்வி, வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது பிரகாஷின் அண்ணன் பாக்யராஜ், (வயது30), நாட்டு துப்பாக்கியுடன் அங்கு வந்தார். செல்வியை துப்பாக்கியல் நெற்றியில் சுட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த செல்வி, துடிதுடித்து இறந்தார்.

சங்கராபுரம் போலீசார், பாக்யராஜை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தம்பி மனைவியான செல்வியை, ஆசைக்கு இணங்குமாறு அடிக்கடி பாக்யராஜ் வற்புறுத்தி வந்ததாகவும், அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்து, கொலை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

கொலை செய்ய பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை, பாக்யராஜ், அனுமதி இன்றி வைத்திருந்ததும் தெரிய வந்தது. கொலை சம்பவத்திற்கு பிறகு மறைத்து வைத்த துப்பாக்கியை, போலீசார் தேடி வருகின்றனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top