புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சவூதி அரேபியாவிற்கு தொழில் நிமித்தம் சென்ற இளம் பணிப்பெண்ணொருவர் மரணமான நிலையில் சடலமாக திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டு இன்று மாலை அடக்கம்
செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை தேவநகரில் வசித்து வந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்த இராசதுரை நந்தினி வயது 34 என்ற பெண்ணே இவ்வாறு மரணமான நிலையில் கொண்டுவரப்பட்டவராவார்.

சவூதி அரேபியாவிலுள்ள தமாம் என்னும் பகுதியிலுள்ள வீட்டிலேயே இவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தே இவரது சடலம் திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சில மாதங்களுக்கு முன்னர் மேற்படி பெண் தனக்கு அங்கிருக்க முடியாதெனவும் தன்னை மீள அழைக்குமாறும் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

1 கருத்து:

 
Top