புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அஞ்சலியின் மார்க்கெட்டில், சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது போல், தோன்றினாலும், இப்போதைக்கு, அதிக படங்களில் நடிக்கும் நடிகைகளின்பட்டியலில், அவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.சேட்டை, வத்திக்குச்சி, மதகஜராஜா, ஒன்பதுலகுரு படங்களில் நடித்து வரும் அஞ்சலி, சிங்கம்-2 படத்தில், ஒரு பாடலுக்கு மட்டும், நடனம் ஆடுகிறார்.
தெலுங்கிலும், முன்னணி நடிகர்களுடன் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஐதராபாத்திற்கும், சென்னைக்குமாக பறந்து கொண்டிருக்கும் அஞ்சலியிடம், “சினிமாவில் நீங்கள் நினைத்தது நடந்ததா என கேட்டதற்கு, ரொம்பவே சந்தோஷப்பட்டார்.
“கதைகளை தேர்வு செய்து தான் நடிக்கிறேன். “அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் படங்கள் என் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தின. தற்போது நடித்து வரும் படங்களின், கதைக் களங்கள், கல கலப்பானவை. “ஹீரோயின் வாய்ப்பு வரும்போது, ஒரு பாடலுக்கு மட்டும், நடனமாடுவது ஏன் என, பலரும் கேட்கின்றனர்.
அந்த பாட்டு, ஹிட்டாகும் என, தெரிஞ்சு தான் ஆடுகிறேன். புது இயக்குனர்கள் இரண்டு பேர் கதை சொல்லியிருக்காங்க. இப்ப நடிச்சிட்டிருக்கிற படங்களை முடிச்சுட்டு கால்ஷீட் தர்றேன்னு சொல்லியிருக்கிறேன் என, உற்சாகத்துடன் கூறுகிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top