புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

• தலைவலிக்கு மருந்தாக 2 சொட்டு நொச்சி தைலத்தை மூக்கின் துவாரங்களில் தடவலாம். தலையிலும் இந்த தைலத்தை தடவலாம்.

• குழந்தைகளின் சளிக்கு வெற்றிலை, கருந்துளசி சாற்றை தேனில் கலந்து கொடுக்க வேண்டும்.

• சொத்தைப் பல் வலிக்கு சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து பல்லில் வைத்தால் தீவிரமான வலியை உடனே கட்டுப்படுத்தும். பிறகு தகுந்த வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.

• காலில் சுளுக்கு வலி ஏற்பட்டால் சூடாக உப்பு, புளி சேர்த்து பற்று போட வேண்டும்.
• வயிற்று வலிக்கு வெந்நீரில் நெய்,சுக்கு,சர்க்கரை கலந்து கொடுக்க வேண்டும். வலியுள்ள பகுதியில் சூடாக தைலம் தடவுவதும் நல்லது.
 • வயிறு, நெஞ்சு எரிச்சலுக்கு உலர்ந்த கறுப்பு திராட்சை, கடுக்காய், சர்க்கரை ஆகியவற்றை சமஅளவு சேர்த்து சாப்பிட வேண்டும். அவற்றை அரைத்து வில்லைகளாக்கியும் சாப்பிடலாம். பாலுடன் சுக்கு கலந்து உட்கொள்வதும் நல்லது.

• வயிற்று வலிக்கு ஓமத்டித அரைத்து மோரில் கலந்து கொடுத்தாலும் குணம் கிடைக்கும்.
• மலம் சரிவர வெளியேற 1/2 ஸ்பூன் விளக்கெண்ணெயை சுக்கு வெந்நீரில் கலந்து உட்கொள்ளவேண்டும்.

• வாந்தி, குமட்டலுக்கு இஞ்சி சாறு, வெங்காய சாறு கலந்து கொடுக்கலாம்.
• இஞ்சி சாற்றில் புதினா,சிறிது உப்பு, வெங்காயம் கலந்து குடித்தால் அஜீரணம், குமட்டல், பசியின்மை,வயிற்று உப்புசம் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

• குழந்தைகளின் சளிக்கு வேப்பெண்ணெயை மார்பு,முதுகுப் பகுதியில் தடவ வேண்டும்.
• சாதாரண தீப்புண்ணுக்கு சோற்று கற்றாழையின் உள் பகுதியில் உள்ள சோற்றை எடுத்து தடவலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top