புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


போதை பொருள் கடத்தலில் புதுப்புது நுட்பங்களெல்லாம் பயன்படுத்துகிறார்கள், ஆனாலும் பொலிசாரின் கண்ணில் மண்ணைத் தூவ முடியுமா? ... Barcelona, El Prat விமானநிலையத்தில் நாகரிகமாக உடையணிந்த பெண்ணொருவர் வந்திறங்கினார். அவரை வழக்கமாக பிரயாணிகளைக் கேட்கும்
கேள்விகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், கேட்ட போது அவரின் பதில்கள் சந்தேகத்திற்கு இடமாக இருந்திருக்கிறது.

அதனால் அவரின் உடமைகளை சோதனையிட்டபின், அவரது உடலையும் சோதனையிட்டனர். அப்போது அவரின் மார்பகங்களை பாண்டேஜ் துணியால் கட்டி இருந்ததையும் அதில் இரத்தம் கசிவதையும் கவனித்தனர்.இவளை சந்தேகப் பட்ட போலீசார் டாக்டர்களை வைத்து பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில், அறுவை சிகிச்சை மூலம் தனது இரு மார்பகங்களிலும் 2 kg கொக்கைன் போதைப்பொருளை அவள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் 100,000 பவுண்ஸ்களாகும். பின்னர் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இப்போது அந்தப் பெண்மணி தன்னை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கட்டாயப்படுத்தி சத்திரசிகிச்சை செய்து போதைப்பொருளை கடத்த வைத்தாக வாக்குமுலம் கொடுத்திருக்கிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top