செக்கில் கையெழுத்து போட 'கமிஷன்' கேட்ட, பஞ்சாயத்து தலைவரின் மர்ம உறுப்பை, பிளேடால் வெட்டிய பெண் துணைத் தலைவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த புலிவலம் பஞ்சாயத்து தலைவர், சிதம்பரம், (வயது30). துணைத்தலைவராக அன்னலட்சுமி, (வயது25), உள்ளார். இருவரும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள்.
புலிவலம் பஞ்சாயத்தில் தெரு விளக்கு, குடி நீர் மோட்டாரை ரிப்பேர் செய்ய, பரமசிவம் என்பவர் டெண்டர் எடுத்திருந்தார். வேலை முடிந்த பின்னரும் டெண்டர் பணத்தை தர, தலைவர் சிதம்பரம் 'செக்'கில் கையெழுத்து போட மறுத்து வந்தார்.
பரமசிவம், துணைத்தலைவர் அன்னலட்சுமியிடம் முறையிட்டார். நேற்று முன் தினம் மாலை, சிதம்பரத்தை தன் வீட்டுக்கு வரும்படி அன்னலட்சுமி கூறினார். சிதம்பரம், அன்னலட்சுமியின் வீட்டுக்கு சென்ற போது, அங்கு டெண்டர் எடுத்த பரமசிவம் இருந்தார்.
"வேலை செய்ததற்கு பரமசிவத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு 'செக்' கொடுக்கலாமே," என, அன்னலட்சுமி கூறினார். "கமிஷன் கொடுக்காமல் 'செக்'கில், கையெழுத்து போட முடியாது," என, சிதம்பரம் கூறினார். இதில், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அன்னலட்சுமி, அருகில் வைத்திருந்த பிளேடால் சிதம்பரத்தின் மர்ம உறுப்பை வெட்டினார். "அய்யோ... அம்மா... காப்பாத்துங்க..." என, கதறியபடி ரத்தம் சொட்ட சொட்ட சிதம்பரம் தலைதெறிக்க ஓடினார். அப்பகுதியில் இருந்தவர்கள், சிதம்பரத்தை, சோளிங்கரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக, சிதம்பரம் சோளிங்கர் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் அன்னலட்சுமியை கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக