இன்று காலை இங்கிலாந்தின் பல பகுதிகளில் நிலவிய பனிமூட்டம் காரணமாக முக்கிய விமான சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டுள்ளன லண்டனில் இருந்து Warsaw, Stockholm and Germany செல்லும் விமானங்களும் ஏனைய நகரங்களில் இருந்து வரும் வெளியூர்
விமானங்களுமே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளன. லண்டன் சிட்டி விமானநிலையத்திலும் நேரதாமதம் வெகுவாக காணப் பட்டது, இதனால் பயணிகள் தமது டிக்கெட்டுகளையும் மீளப் பெற்றுக் கொண்டனர்.
Buckinghamshire பகுதியில் -9C யிலும், Gloucestershire இல் -8C யிலும் ஸ்காட்லான்ட்டில் -10C வரையிலும் குளிர் நிலவுகிறது.
இதே நிலைமை கிறிஸ்மஸ் வரையிலும் தொடருமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக