புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இளம் வாலிபனை மயக்கி அவருடன் உறவு வைத்துக் கொண்ட 38 வயதுப் பெண்ணுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.பிரித்தானியாவின் பிரிஸ்டலைச் சேர்ந்த மேரி ஜீன் பிரண்ட்ஷிப் என்ற இந்த பெண் ஏற்கனவே திருமணமானவர்.


இவர் இளம் வாலிபன் ஒருவனுடன் நெருக்கமாக பழக இந்த நட்பு விபரீதமாக மாறியது.ஏற்கனவே கடந்த 18 வருடமாக தனது கணவருடன் வாழ்க்கை நடத்தி வரும் மேரி இவ்வாலிபனுடனும் உறவு கொள்வதை பழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இதை தனது தோழியர் சிலரிடம் பெருமையாகவும் கூறியுள்ளார். அவர்கள் மூலமாக காவல்துறை வரை விடயம் சென்றுள்ளது.

இதையடுத்து மிகவும் குறைந்த வயது கொண்ட வாலிபனை மயக்கி தவறான உறவுக்குப் பயன்படுத்தியதாக இவர் மீது பொலிஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இதில் மேரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த பிரிஸ்டல் நீதிமன்றம், மேரிக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ஆனால் அவரது தரப்பு சட்டத்தரனி, மேரிக்கும் வாலிபனுக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக கூறப்படுவது தவறு, உண்மையில் அந்தப் பையனுக்கு வயது 16க்கு மேல் ஆகிறது.

எனவே இந்த உறவில் தவறு இருப்பதாக கூற முடியாது. இதுகுறித்து மேலும் சட்ட ஆலோசனை மேற்கொண்டுள்ளோம்.

எனவே தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து தண்டனையை 2 வருடத்திற்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top