புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தைச் சேர்ந்தவர் காமாட்சி, 32. போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு 12.12.2012 புதன்கிழமை, இரண்டு மகன்களுடன் வந்து, புகார் ஒன்றை அளித்தார்.


அதன் விவரம்: பெற்றோர் எதிர்ப்பை மீறி, எதிர்வீட்டில் குடியிருந்த, ராஜகோபால் மகன் பிரபுவை, கடந்த, 1998ல், காதல் திருமணம் செய்தேன். எங்களுக்கு, புவனேஸ்வரன், 14, தினேஷ்குமார், 12, என, இரு பிள்ளைகள் உள்ளனர்.

என் கணவருக்கு திருமணத்திற்கு முன்பே, பல பெண்களுடன் பழக்கம் இருந்துள்ளது. என் தோழி சுமிதா, அவர் மூலம் அறிமுகமான, கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ஸ்ரீதேவி ஆகியோருடன், கணவர் நெருக்கம் கொண்டார். இதுகுறித்து கேட்டால், அடித்து சித்ரவதை செய்வார்.

இதனால், கடந்த, 2009ல், விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தேன். கெஞ்சி, கூத்தாடி, வழக்கை வாபஸ் பெற வைத்தார். குழந்தைகளின் நலன் கருதி, அவருடன் வாழ சம்மதித்தேன். இதை சாதகமாக பயன்படுத்திய அவர், மீண்டும் தன் காம வலையை, பெண்கள் மீது வீசத் துவங்கினார்.

ஸ்ரீதேவியை அவர் திருமணம் செய்து, இரண்டு குழந்தைகள் உள்ளது தெரிந்தது. குடும்ப மானம் கருதி, எதையுமே நான் வெளியில் சொல்லவில்லை.

கடந்த நவம்பர் 14ம் தேதி, அவரின் அலைபேசியை ஆய்வு செய்தேன். அதில், சுமிதா, ஸ்ரீதேவி தவிர, பல பெண்களுடன் நெருக்கமாக உள்ளதை, படம் பிடித்து வைத்திருந்தார். "தினமும் இதை ரசித்து பார்க்கவில்லை என்றால், தூக்கமே வராது' என்றும் தெரிவித்தார். என்னை மட்டுமல்ல, பல பெண்களின் வாழ்வை சூறையாடிய கணவர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top