இந்தியா -திருத்துறைப்பூண்டி அருகே 17 வயது கல்லூரி மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மன்னார்குடியில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. அந்த கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவியை அதே ஊரைச் சேர்ந்த ஷேக் அலாவுதீன்(24) என்ற வாலிபர் கடத்திச் சென்று கற்பழித்தார்.
இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அலாவுதீன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக