ஜேர்மனியில் அன்ஸ்பாக்(Ansbach) நகரில் வாழ்ந்து வந்த செஷ்னியாவைச் சேர்ந்த ஓர் அகதிக் குடும்பத்தை அரசு அதிகாரிகள் பிரித்து வைத்துள்ளனர்.
அதில் மூத்த குழந்தைகள்(7வயது, 12) இருவரையும் தந்தையுடன் கடந்த ஏப்ரல் 10ம் திகதியன்று போலந்துக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
ருஷ்யப் படைவீரர்களால் பலமுறை பாலியல் வன்முறைக்கு ஆளான தாயும் அவரது கடைசி இரண்டு குழந்தைகளும் பவேரியாவில் உள்ளனர். இந்தத் தாய் தற்பொழுது கருவுற்றிருக்கிறார். மேலும் வல்லுறவு காரணமாக அவரது மனநலம் பாதிக்கப்பட்டதால் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாயுடன் தங்கியிருக்கும் சிறு குழந்தைகள் இருவரும் ஜேர்மனியில் ஒரு குடும்பத்தினரின் பாதுகாப்பில் உள்ளனர். போலந்துக்குத் தந்தையுடன் அனுப்பி வைக்கப்பட்ட பிள்ளைகள் இருவரும் அங்கு அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பவேரியா நாடாளுமன்றத்தில் இக்குடும்பத்தை குறித்து கடுமையான விவாதம் நடைபெற்றது. அதில் குடும்பத்தைப் பிரித்தது மனிதத் தன்மையற்ற செயல் என்றும் தாயின் மனநலம் சரியான பின்னர் அவர்களை மொத்தமாக அனுப்பியிருக்கலாம் எனவும் சமதர்மக் குடியரசு கட்சியினரும் விடுதலைக் குடியரசுக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக