பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய கோள்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு
அருகில் உள்ள 5 கோள்களில் பூமியைப் போலவே இருக்கும் 2 கோள்களில் அதிக வெப்பமோ, அதிக குளிரோ இல்லாமல் இருப்பதாகவும், நீர் ஆதாரம் போதிய அளவு இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது பூமியை விட சுற்றளவில் பெரியதாகும். இருப்பினும் இந்த கோள்களில் நிலப்பரப்பு பாறை அமைப்பை கொண்டதா அல்லது நீர் அமைப்பை கொண்டதா என்பது குறித்து விஞ்ஞானிகள் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த கோள்கள் மனிதன் வாழ ஏற்ற சூழலை கொண்டதாக இருக்கும் என மட்டும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கெப்லர் 62 ( சூரியனை சுற்றி வரும் நட்சத்திரம் போன்ற கோள்கள்) க்கு அருகே சிறிய புள்ளி போன்ற ஒரு அமைப்பு காணப்படுவதை நாசா விஞ்ஞானிகள் கடந்த ஓராண்டுக்கு முன் கண்டறிந்தனர். அந்த புள்ளி போன்ற அமைப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய 2 கோள்களின் தன்மை கண்டறியப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த புள்ளி போன்ற நட்சத்திரம் போன்ற அமைப்பை சுற்றி 5 கோள்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு கெப்லர் 22பி சுற்றி உள்ள 600 ஒலி ஆண்டு தொலைவில் உள்ள சில கோள்கள் குறித்த ஆய்வை நாசா துவக்கியது. அப்போது பூமியை விட 2.4 மடங்கு பெரிய கோள்கள் கண்டறியப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக