புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு-செங்கலடி மத்திய கல்லூரியில் மாணவர்களின் ஒழுக்கக்கேடுகள் தொடர்பாக ஏற்கனவே தமது கவனத்திற்கு பல புகார்கள் கிடைத்துள்ளதாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா
தெரிவித்துள்ளார்.
செங்கலடி நகர வர்ததகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவர்களும் ஒரு மாணவியும் ஏறாவூர் பொலிஸாரால் சந்தேகத்தின பேரில் கைதாகி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த மாணவிக்கும் மாணவனொருவனுக்கும் இடையிலான காதல் தொடர்புகளின் பின்னணியிலேயே இந்த இரட்டைக் கொலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செங்கலடி மத்திய கல்லூரியின் மாணவர்கள் ஒழுக்கக்கேடு தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த மாதம் இந்த ஒழுக்கக்கேடுகள தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு மாணவர்கள் ஒழுக்கம் தொடர்பாக பாடசாலை நிருவாகத்தினருக்கு பல்வேறு உத்தவுகளைப் பிறப்பித்திருந்தேன்.

மாணவர்கள் விடும் ஒழுக்கக் கேடுகள் பற்றி சுடடிக்காட்டினாலும் பாடசாலை நிருவாகம் அதனை மூடி மறைப்பதற்கே முற்படுகிறது.

இதன் விளைவாகவே குறித்த கொலைச் சம்பவம் பலரும் கூறுவதை மறுக்க முடியாத நிலையே உள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பாக பாடசாலை மாணவர்கள் சந்தேக நபர்களாக காணப்படுவது தொடர்பான நிருவாக ரீதியான விசாரணைகள் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் ஆசியர்கள் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பாடசாலை சமூகத்துடன் இதுபற்றி ஆராயப்பட்டு அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்கப்படும்.

இந்த பாடசாலையைப் பொறுத்தவரை புதிய மாற்றம் தேவைப்படுகிறது. இதற்கமைய 7 வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய அதிபர் உட்பட சகல ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்குவது குறித்து மாகாண கல்விப் பணிப்பாளரின் கவனத்திறகு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது என பதிலளித்தார்.

மட்டக்களப்பில் காதலுக்காக அரங்கேறிய இரட்டைக்கொலை குறித்த உண்மைகள்
மட்டக்களப்பில் காதலுக்காக பெற்றோரை கொலை செய்த மகள்-புகைப்படங்கள்


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top