புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அறிவுரை போல எளிதாக கிடைப்பது எதுவும் இல்லை..எப்பொழுதும் கவனம்,கவனம் என்று கூறிக்கொண்டே இருக்கிறோம்..ஆனால் ஏன் எதற்கு என்று யாரும் விளக்கிக் கூறுவதில்லை...அப்படியே யாராவது கூறினாலும்
நமக்கு கேட்க பொறுமையும் இல்லை.இப்படி இருக்கையில் இது விழிப்புணர்வோ ,அறிவுரையோ இல்லை ..தகவல்கள்-அவ்வளவே!. இன்றைய நிலையில் ஒரு நாளைக்கு இன்டர்நெட் வருபவர்கள் porn sites எனப்படும் மோசமான பக்கங்களுக்கு செல்பவர்கள் 42 % ..தினமும் இதனால் ஈர்க்கப்படும் மாணவர்கள் கோடிகணக்கில். இதன் மூலம் அடிமையாகி பிரிந்து போன கணவர்,மனைவியர் ..சிதைந்து போன குடும்ப உறவுகள் ஆயிரக்கணக்கில். ஆனால் வளர்ந்துவரும் டெக்னாலஜி உலகில் இவை இல்லாமல் இனி வாழ்வது கடினமே..இளைய தலைமுறை இணையத் தொடர்பு இல்லாமல் படிக்க,பள்ளிக்கு போக முடியாது என்ற நிலையில்தான் உள்ளனர்.

கிட்டத்தட்ட நிறைய வேலைகள் கம்ப்யூட்டர் மயமாகி விட்டது.அனைத்தும் இதில்தான் சேமிக்கப்படுகிறது. மொபைல், டி.வி இல்லாமல் கிராமத்தில் கூட வாழ்க்கை நடத்துவது சாத்தியம் இல்லை என்றாகி விட்டது. இன்டர்நெட் இல்லாத உலகம் இனி இல்லை என்று கூறும் காலத்தை நெருங்கி கொண்டு இருக்கிறோம். அப்படி இருக்கும் பொழுது இங்கு ஆபத்து அதிகம் பெண்களே,குழந்தைகளே இங்கு வராதீர்கள் என்றெல்லாம் கூறுவது தெருவில் நடக்காதீர்கள் ஆக்சிடென்ட் ஆகி விடும் என்று கூறுவதை போல கேலிகூத்து வார்த்தைகள் ஆகிவிடும்.அதே சமயம் நடு வீட்டில் குத்தாட்டம் போடும் டி.வியை அனுமதிக்கும் வீட்டில் இன்டர்நெட் என்றால் மோசமான வஸ்துவைபோல பார்க்கும பெற்றோர்களும் உள்ளனர்.

சமீபத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து மோசமான தளங்களில் உலவ விட்டதால்சம்பந்தப்பட்ட பெண் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.வேறொருவர் தன் மனைவியின் புகைப்படம் மோசமான தளத்தில் இருந்ததால் விவாகரத்து செய்து விட்டார். இவை உண்மை சம்பவங்கள்..இது போன்ற எத்தனையோ வக்கிரங்கள் சமூக வலை தளங்களில் நடக்கிறது. இந்த வக்கிர உலகமும் கூட எத்தனையோ கோடிகளில் நடக்கும் வியாபாரமாகி விட்டது.. தற்பொழுது சுப்ரிம் கோர்ட் கூட தன் கவலையை தெரிவித்து இருக்கிறது. மோசமான பக்கங்கள்,வக்கிர உணர்வுகளை தூண்டும பக்கங்களை தடை செய்வது பற்றிய ஆலோசனை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டு கொண்டு உள்ளது. அத்தனை மோசமாக ஊடுருவி இருக்கிறது இதை போன்ற வலை தளங்கள்.

பணம் கொடுத்து போட்டோக்கள் விற்பதை பற்றி நமக்கு கவலை இல்லை. அவர்களுக்கு அது தொழில் .ஆனால் சாதாரண பெண்கள் வாழ்க்கையிள் விளையாடும் பொழுதுதான் பிரச்சனை வருகிறது. பெண்கள் குனிந்தால்,திரும்பினால் ,புடவை நழுவினால் ,மால் போன்ற இடங்களில் மேலே இருந்து என்று எத்தனையோ கோணங்களில் படம் பிடித்து அதை மார்பிங் மூலம் மேலும் கவர்ச்சியாக்கி இணையதளங்களில் வெளியிடுவது அதிகமாகிக்கொண்டே போகிறது. தடுக்க பெண்கள் பர்தா போடுவதை தவிர வேறு வழி இல்லை..

அது மட்டும் இல்லாமல் நாம் எத்தனை கவனமாக போட்டோக்கள் வைத்து இருந்தாலும் சமூக வலை தள திருடர்கள் பெண்கள் பெயரில் இருக்கும் அக்கௌன்ட்களை ஹேக் செய்து நம் பெர்சனல் போட்டோக்களை திருடி மார்பிங் செய்து அதற்கென்று இருக்கும் பக்கங்களில் வெளியிட்டோ, இல்லை அதை விற்றோ பணம் சம்பாதிக்கும் போக்கு அதிகரித்துதான் வருகிறது.சாதாரண பெண்களின் படங்களை பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு அந்த பெண்ணை பற்றி மோசமான கமெண்ட்கள் மூலம் மன வக்கிரங்களை கொட்டும் அவலங்களும் அதிகமாக நடக்கிறது.

இதற்கிடையில் ஆண்களுக்கு கூட இப்பொழுது ஆபத்தாம்..அவர்களுக்கும் இது போன்ற மோசமான பக்கங்கள் இருப்பதை கேட்டு அதிர்ச்சி ஆகிவிட்டது. இந்தியா எங்கு போய் கொண்டு இருக்கிறது என்று.அதே சமயம் குழந்தைகள் படங்களை வக்கிரமாக மாற்றும் கொடுமைதான் இதன் உச்சகட்டம்..

அந்த நிகழ்வுகளை கேட்டு அதிர்ந்துவிட்டேன். இப்போதெல்லாம் மூன்று,ஐந்து வயது குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யும் வக்கிரங்கள் நடைபெறும் செய்திகளை தினம் கடக்கிறோம். நாடு எங்கு போய் கொண்டு இருக்கு ? சட்டங்கள் என்ன செய்து கொண்டு இருக்கு என்பதை நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கு..நம் சாதரணமாக பகிரும் நம் குழந்தைகளின் படங்கள் அவர்கள் வாழ்க்கையில மிகப் பெரிய பாதிப்பும், மன உளைச்சலும் ஏற்படுத்தும் என்றால் எத்தனை பெரிய வேதனை ?

இதற்கு அரசாங்கம் நினைத்தால் கண்டிப்பாக முற்றுபுள்ளி வைக்க முடியும். சைனாவில் நிறைய வலைத்தளங்களுக்கு தடை உண்டு..அதே போல இங்கேயும் மோசமான வலைத் தளங்களுக்கு தடையும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இன்னும் அதிக கட்டுபாடுகளும் கொண்டு வந்தால் மேலும் உயர் இழப்புகளையும்,பெண்கள், குழந்தைகள் மேல் பாயும் வக்கிரங்களையும் தடுக்க முடியும். நல்லதே நடக்கும் என்று நம்புவோம். வேறென்ன செய்ய முடியும் வேதனைகளை பகிர்வதை தவிர...

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top