புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அவுஸ்திரேலியா அழைத்துச்செல்வதாக கூறும் மோசடி பேர்வழிகளை நம்ப வேண்டாம் என கடலோர பொலிஸ் பொறுப்பதிகாரி சைலேந்திரபாபு இலங்கை தமிழர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள்
சமீபகாலமாக கள்ளத்தனமாக படகுகள் மூலம் ஆபத்தான முறையில் அவுஸ்திரேலியா செல்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மதுரை, கூடலூரில் உள்ள அகதிகள் முகாமிற்கு பொலிஸ் பொறுப்பதிகாரி சைலேந்திரபாபு சென்று அங்குள்ள இலங்கை தமிழர்களை சந்தித்து பேசி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது, அவுஸ்திரேலியா அழைத்துச்செல்வதாக கூறி பணம் பறிப்பவர்களை நம்பி படகுகளில் ஆபத்தான முறையில் யாரும் செல்ல வேண்டாம். இதுவரை கள்ளத்தனமாக படகுகளில் சென்ற 550 இலங்கை தமிழர்கள் நடுக்கடலில் காணாமல் போயுள்ளனர்.

இனிமேலும் இது போன்று ஆபத்தான முறையில் பயணிப்பவர்களை தடுக்க 19 இடங்களில் கடலோர கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கை தமிழர்களை ஏமாற்றி அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாக சுரேஷ் என்பவரையும், முகவராக செயல்பட்ட ஒருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளோம் என்றார். உடன் சென்றிருந்த வடக்கு தாசில்தார் கூறுகையில், அவுஸ்திரேலியா செல்ல விரும்பினால், அதற்காக முறையாக அனுமதி பெற்று செல்ல அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்படும் என்றார்.!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top