புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை முற்றாக தடைசெய்யுமாறு கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கல்குடா கல்வி
வலயத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். கல்குடா வலயத்திலுள்ள 83 பாடசாலைகளுக்கும், இப்பாடசாலைகளின் அதிபர்களுக்கும் புதன்கிழமை இது தொடர்பான கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார். பாடசாலைகளுக்கு மாணவர்கள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு செல்வது மற்றும் பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசியை பாவிப்பது முற்றாக தடைசெய்யப்படுகின்றது.

இருப்பினும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு கையடக்கத் தொலைபேசியை கொண்டு வந்தால் அல்லது மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை கண்டால் அம்மாணவர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கடித்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அவ்வாறே பாடசாலை நேரங்களில் வகுப்புக்களில் ஆசிரியர்களும் கையடக்கத் தொலைபேசி பாவிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஆலோசனை கூறியுள்ளதாகவும் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா மேலும் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top