நீர்கொழும்பில் இரகசியமாக முறையில் இயங்கி வந்த ஆடம்பர விபசார நிலையங்கள் பொலிஸாரினால் சுற்று வளைக்கப்பட்டுள்ளது.
இதன் போது விபசார நிலைய முகாமையாளர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டதாக நீர்கொழும்பு
பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு ருக்மணிதேவி மாவத்தையிலேயே இந்த விபசார நிலையங்கள் மிகவும் இரகசியமாக இயங்கி வந்துள்ளது.
வாடிக்கையாளர்களை போல சிவில் உடையில சென்ற பொலிஸார் இருவரே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட இவர்கள் நீர்கொழும்பு பதில் நீதவான் சுவர்ணா பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குறித்த ஐந்து பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
0 கருத்து:
கருத்துரையிடுக