புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகர் விஜய் ஜோடியாக தலைவா படத்தில் நடிக்கிறார் அமலாபால். தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் அமலாபால் அளித்த பேட்டி வருமாறு:


நான் கடவுளை நம்புகிறேன். கடவுள் உண்டா இல்லையா என்ற சர்ச்சைகள் நாட்டில் நடந்து கொண்டு இருக்கின்றன. நான் அவர்களுக்கு சொல்வதெல்லாம் ஒரு முறை நம்பி பாருங்கள் என்பது தான். கடவுளை நம்ப ஆரம்பித்தால் மனம் அமைதியாகும். நிம்மதி கிடைக்கும். நம்பிக்கைகள் இருக்கலாம். ஆனால் மூட நம்பிக்கை கூடாது. குருட்டுத்தனமான நம்பிக்கைகள் இருக்க கூடாது. அதே நேரம் யாரையும் நம்பாமலும் வாழ முடியாது. படங்களை தேர்வு செய்ததும் கதை மற்றும் இயக்குனரை நம்ப வேண்டும். எல்லா படங்களும் தோற்பது இல்லை. வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும். ஆனாலும் எதை செய்தாலும் நம்பிக்கையோடு செய்ய வேண்டும். படம் வெற்றி பெறும் என்று நம்ப வேண்டும். நம்பி இறங்கும் போது தான் மனதுக்கு உற்சாகம் கிடைக்கும் வெற்றி தோல்விகள் நம் கையில் இல்லை. முழு ஈடுபாட்டோடு வேலைகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அமலாபால் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top