அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் செனட் உறுப்பினர் அனைவருக்கும் விஷம் தடவிய கடிதங்களை அனுப்பி கைதான நபர் வில்லங்கமான பின்னணி கொண்டவர் எனத்
தெரிய வந்துள்ளது.
இவர் தன்னை, மறைந்த பொப் பாடகர் எல்விஸ் பிரஸ்லி என்று கூறி மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல அமெரிக்க அரசு தன்னை டுரோன்களை ஏவி உளவு பார்ப்பதாகவும் கூறி வந்திருக்கிறார். மேலும் பல சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டு வந்தவர் என்று அவரை அறிந்தவர்களும், நீதிமன்ற ஆவணங்களும் தெரிவிக்கின்றன.
விஷம் தடவிய கடிதங்களை அனுப்பிக் கைதான நபரின் பெயர் பால்கெவின் கர்டிஸ். 45 வயதாகும் இவர் நேற்று ஆக்ஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரது சட்டதரனி கிறிஸ்டி மெக்காய் வாதிடுகையில், தனது கட்சிக்காரர் இந்தக் குற்றத்தை 100 சதவீதம் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர் குறித்து 74 வயதான கர்டிஸின் தந்தை ஜேக் கூறுகையில், எனது மகனுக்கு லேசான மன நல பிரச்சினை இருக்கிறது என்றும் தான் செய்வது என்ன என்று தெரியாமல் பலகாரியங்களைச் செய்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை அவன் வன்முறையாக நடந்து கொண்டதில்லை. அவர் கடிதங்களில் ரைசின் தடவி ஜனாதிபதிக்கும், பிறருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. அவருக்கு ரைசின் என்றால் என்ன என்றே தெரியாது. அது எங்கு கிடைக்கும் என்பது கூட தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய இணையதள பக்கத்தில் தன்னைப் பற்றி குற்றம்சாட்டப்பட்ட கர்டிஸ் கூறுகையில், தொழிலதிபர், புரட்சிவாதி, பாடகர், தொண்டர்,பாடலாசிரியர் என்று விதம் விதமாக வர்ணித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக