ஈரானில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதினால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு
நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஈரானில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.
அதை தொடர்ந்து அப்பகுதியில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் இந்த முறை நடந்த நிலநடுக்கம் குறித்த சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
பூமிக்கு அடியில் 2.கி.மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக டெக்ரான் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இதே பகுதியில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் உருவானதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக